தமிழக காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்காததைக் கண்டித்து தமிழக காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தினம் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29-ஆம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு கடந்த 16-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
Advertisement
Advertisement
இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஏற்கனவே அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய தேதிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தபிறகு இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.