தமிழ்நாடு

மத்திய அரசு எவ்வளவு வேகமாக வேலை செய்கிறது பார்த்தீர்களா? ஸ்டாலின் உரை

DIN


சென்னை: தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்து மத்திய அரசு எவ்வளவு வேகமாக வேலை செய்கிறது பார்த்தீர்களா? என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமரிசித்துள்ளார்.

கடந்த மாதம், தலைமைக் கணக்குத் தணிக்கை வெளியிட்ட அறிக்கையில் பாஜகவின் ஏழு மெகா ஊழல்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமரிசித்துள்ளார்.

சிஏஜி அறிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் குரல் என்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசியிருந்த நிலையில், சிஏஜி அதிகாரிகள் கூண்டோடு இட மாற்றம் செய்யப்பட்டனர் என்ற செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், தமிழகத்தின் குரல் என்ற மூன்றாவது நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு கூறியிருக்கிறார். அதாவது, செப்டம்பர் 23ஆம் தேதி வெளியான இரண்டாவது உரையில், சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பாஜகவின் ஏழு மெகா ஊழல்கள் பற்றி பேசியிருந்தேன். அதெல்லாம் உண்மை என்று மத்திய அரசே ஒத்துக்கொள்வதைப் போல ஒன்றைச் செய்திருக்கிறார்கள்.

பாஜக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த சிஏஜி அதிகாரிகள், செப்டம்பர் 12ஆம் தேதியே கூண்டோடு மாற்றப்பட்டனர் என்ற தகவல் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது. எவ்வளவு விரைவாக செயல்பட்டுள்ளார்கள் பார்த்தீர்களா?

இந்த மூன்றாவது உரையில் நாம் பேசப்போவது மாநில உரிமைகள் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

எங்கே என் அன்பே?

இது என்ன கோலம்! தீப்தி சுனைனா..

SCROLL FOR NEXT