தமிழ்நாடு

அரசுப் பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் பரபரப்பு!

DIN

வாழப்பாடி அருகே அரசு பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிபாடுகள் ‌அகற்றப்படாததால்,  அப்பகுதியில் பாம்புகள் புகுந்துள்ளன. 

நேற்று திங்கள்கிழமை ‌பள்ளிக்குள்  கருஞ்சாரை பாம்பு ஒன்று  பிடிபட்டது. இன்று செவ்வாய்க்கிழமை, 4 அடி நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பு ஒன்று பள்ளிக்குள் சுற்றியது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளிக்கு விரைந்து சென்ற வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர், அந்த பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து பாம்புகளை கண்டதால் மாணவர்கள் அச்சமடைந்து அலறினர். இருப்பினும் இந்த பாம்புகள் விஷம் இல்லாதவை என்பதால், ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிம்மதி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT