முகப்பு
தமிழ்நாடு

கோவை வந்த மத்திய அமைச்சா் பியூஷ் கோயலிடம் விவசாயிகள் மனு

கோவையில் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சாா்பில் 11 ஆவது ஆசிய ஜவுளி மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டுள்ள அமைச்சா் பியூஷ் கோயலிடம் கோரிக்கை மனு அளித்தனர

Updated On : 1 செப்டம்பர் 2023, 3:09 pm IST
பகிர்:

கோவையில் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சாா்பில் 11 ஆவது ஆசிய ஜவுளி மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டுள்ள அமைச்சா் பியூஷ் கோயலிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை வருகை புரிந்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயலிடம் வெங்காயத்திற்கு விதிக்கப்பட்ட 40% ஏற்றுமதி வரியை குறைக்க வேண்டும். அதேபோல் தேங்காயின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே பாமாயிலுக்கு மாற்றாக இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். மத்திய அரசு கொப்பரைத்தேங்காய் விலை ரூ.108.50 விலை நிர்ணயத்தும், உரித்த தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தும் அது விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தென்னை விவசாயிகளின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளதென்ற கோரிக்கை மனுவை வைத்தனர்.

Advertisement

Advertisement

வெங்காயப் பிரச்னையை நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், தேங்காய் பிரச்னையை உரிய துறை அதிகாரிகளோடு கலந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் உழவர் உழைப்பாளி கட்சித்தலைவர் செல்லமுத்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தலைவர் ஈஸ்வரன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் மந்திராச்சலம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய பிரதிநிதிகளோடு பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் உடனிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.