திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு உணவு சமைத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள். 
தமிழ்நாடு

50 வயதானோர் பணி நீக்கம்:  திருமுருகன்பூண்டியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருமுருகன்பூண்டியில் 50 வயதுக்கு மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DIN


அவிநாசி: திருமுருகன்பூண்டியில் 50 வயதுக்கு மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் 70-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், 30-க்கும் மேற்பட்டோர் கொசு ஒழிப்பு பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர், தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் 50 வயதுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதனைக் கண்டித்து  சிஐடியு சங்கம் சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், வெள்ளிக்கிழமை வேலையை புறக்கணித்து, திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு உணவு சமைத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT