ஆன்லைன் விளையாட்டில் தோல்வி: மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலை
வேலூர் அருகே ஆன்லைன் விளையாட்டில் தோல்வியடைந்த விரக்தியில் 14 வயது மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்: வேலூர் அருகே ஆன்லைன் விளையாட்டில் தோல்வியடைந்த விரக்தியில் 14 வயது மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வேலூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரரை அடுத்த பெரிய பாலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமு(14). இந்த மாணவன் கைப்பேசி மூலம் ஆன்லைன் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு காக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Advertisement
Advertisement
இந்த நிலையில், வியாழக்கிழமை ஆன்லைன் விளையாட்டில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விரக்தியில் காணப்பட்ட தாமு, வியாழக்கிழமை இரவு வீட்டின் மாடியில் பிளேடால் கழுத்தை அறுத்த தற்கொலை கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் கிராமிய போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.