தமிழ்நாடு

சின்னமனூரில் இளைஞர் குத்திக் கொலை: இருவர் சரண்

DIN


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் இளைஞர் குத்திக் கொலை செய்த வழக்கில் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

சின்னமனூர் சாமிக்குளம் பகுதியைச் சேர்ந்த  அப்தாகிர் மகன் காபில்(21).அதே பகுதியைச் சேர்ந்த காதர் மகன் முகமது ஷரீப்(19) என்பவரிடம் கடனுக்கு பணம் வாங்கியுள்ளார்.

அதை திரும்ப கேட்டும் கொடுக்காத நிலையில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. தவிர, குடும்பப் பிரச்னை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை எடுத்து வெள்ளிக்கிழமை இரவு சின்னமனூர் - வண்டிப்பேட்டை பகுதிக்கு வந்த காபிலிடம் பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து முகமது ஷரீப் அவரது மாமா அலாவுதீன் இருவரும் சேர்ந்து கத்தியால் மாறி மாறி காபிலை அதே இடத்தில் குத்திக் கொலை செய்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சின்னமனூர் போலீசார் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக முகமது ஷரீப் மற்றும் அலாவுதீன் ஆகிய இருவரும் சின்னமனூர் காவல் நிலையத்தில் சரண்  அடைந்தனர்.

சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

SCROLL FOR NEXT