தமிழ்நாடு

இன்பநிதி பாசறை பெயரில் போஸ்டர் அடித்த இருவர் திமுகவில் இருந்து நீக்கம்!

DIN

புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி பாசறை என்ற பெயரில் போஸ்டர் அடித்த திமுகவைச் சேர்ந்த இருவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்பநிதி பாசறை என்ற பெயரில் வரும் செப். 24ஆம் தேதி புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் குறிப்பிட்டு 'எதிர்காலமே'   என்ற போஸ்டர் சனிக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் பரவியது.

இந்த நிலையில் அந்த போஸ்டரை வெளியிட்ட புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் வடவாளம் க.செ. மணிமாறன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மு.க. திருமுருகன் ஆகியோரை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை காலை அறிவித்துள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டதால் அவர்களை நீக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவின் உள்புறங்களில் இஸ்ரேல் ராணுவம்!

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்!

சுவாதி மலிவால் மீது தாக்குதல்: உரிய நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி உறுதி

இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் படையை சேர்ந்த 1,000 பேருக்கு துருக்கியில் சிகிச்சை?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT