லால்குடியில் அரியவகை கொடிய விஷ பாம்பு!
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல். அபிஷேகபுரத்தில் சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரியவகை பாம்பு அரசியல் பிரமுகரின் வீட்டிற்குள் புகுந்தது.
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல். அபிஷேகபுரத்தில் சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரியவகை பாம்பு அரசியல் பிரமுகரின் வீட்டிற்குள் புகுந்தது.
லால்குடி தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார்.
இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்த போது மாடிப்படியின் கீழ் சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரியவகை பாம்பு இருந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரியவகை பாம்பை சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் பாம்பை உயிருடன் பிடித்தனர்.
இதையும் படிக்க: ஒரு பிஸ்கட்டுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!
இதனைத் தொடர்ந்து தச்சங்குறிச்சி வனப்பகுதியில் இந்த பாம்பை விடுவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.