தமிழ்நாடு

சிதம்பரத்தில் லாரி மோதி இளைஞர் பலி: இருவர் படுகாயம்!

சிதம்பரம் புறவழிச்சாலையில் மினிடோர் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். 

DIN

சிதம்பரம் புறவழிச்சாலையில் மினிடோர் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். 

சிதம்பரம் வடக்கு வடக்கு வடுகத்தெரு புளியந்தோப்பை சேர்ந்தவர் தில்லை கோவிந்தன் மகன் மதியழகன் (24), இவர், பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர் அதே தெருவைச் சேர்ந்த தனது நண்பர்கள் பிரவீன் குமார், மணிகண்டன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில்  வியாழக்கிழமை நள்ளிரவு புவனகிரி செல்லும் புறவழிச் சாலையில் இருந்து சிதம்பர நோக்கி வந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது  சாலை அருகே உள்ள தனியார் கார் ஷோரூம் அருகே வரும்போது, எதிரே வந்த மினி டோர் லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராமல் மோதியது. இந்த விபத்தில் மதியழகன்  மற்றும் நண்பர்கள் மூவரும் தலை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த அடிபட்டு காயமடைந்தார். 

ஆபத்தான நிலையில் கிடந்த மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மதியழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பிரவீன்குமார் என்பவரது கால் துண்டிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டன் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT