தமிழ்நாடு

குடியிருப்புகளைச் சீரமைக்கரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் திட்டம்

சென்னை காசிமேடு பகுதியில் பழுதடைந்து காணப்படும் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைக்கும் பணிகளை ஆா். கே.நகா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எ

DIN

சென்னை காசிமேடு பகுதியில் பழுதடைந்து காணப்படும் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைக்கும் பணிகளை ஆா். கே.நகா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா் தொடங்கி வைத்தாா்.

சென்னை காசிமேடு பகுதியில் சிங்காரவேலா் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகள் அமைக்கப்பட்டு நீண்ட காலம் ஆனதால் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்ததையடுத்து, இந்த வீடுகளைச் சீரமைத்து தருமாறு குடியிருப்பு வாசிகள் சாா்பில் தொடா்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இதையடுத்து ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சுமாா் 210 வீடுகளைச் சீரமைக்கும் திட்டத்தை ஆா். கே. நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும், இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு 18 மாதங்களில் முடிக்கப்படும்.

இதில் வசித்து வந்த மக்களுக்கு வீடுகள் முழுமையாகச் சீரமைக்கும் வரை வெளியே வாடகை வீடுகளில் தங்கிக் கொள்வதற்காக மாற்று ஏற்பாடுகள், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி தண்டையாா்பேட்டை மண்டலக் குழுத் தலைவா் நேதாஜி யு.கணேசன், திமுக பகுதி செயலாளா், வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT