முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் பகல்பொழுதில் நல்ல வெயில் வாட்டி எடுத்தாலும், இரவில் பரவலாக மழையும் பெய்வது தொடர்ந்து வருகிறது. இதனால் பூமி குளிர்ச்சியடைந்துள்ளது. 
 
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஈரோடு, சேலம், அரியலூர், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

முழு கட்டுரையைப் படிக்க →