தமிழ்நாடு

தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப் பரிந்துரை!

DIN


தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு நாள்தோறும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தில்லியில் நடந்த ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் வழங்கக்கோரி கர்நாடக அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86-வது கூட்டம் வினித் குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத் துறை அதிகாரி சுப்பிரமணியன் காணொளி வாயிலாக பங்கேற்றார். 

காவிரி நதிநீா்ப் பங்கீட்டில் கா்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. 

இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீா்ப் பங்கை கா்நாடகம் வழங்க மறுப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் கடந்த 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 24,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 21ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

இந்தோனேசியாவில் ஷ்ரத்தா தாஸ்!

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

SCROLL FOR NEXT