சென்னை, புறநகரில் பலத்த மழை!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், வளசரவாக்கம், போரூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சைதாப்பேட்டை, கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகள் கனமழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, கொரட்டூர், மதுரவாயல், பூவிருந்தமல்லி, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் செப்.19 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.