தமிழ்நாடு

சென்னை வேளச்சேரியில் பயங்கர தீ விபத்து!

சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டடத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் 9 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைந்தனர்.

அங்கு இருந்த கட்டுமான தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. 

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாக நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT