முகப்பு
தமிழ்நாடு

தொடர் விடுமுறை... மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!

விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் வெள்ளிக்கிழமை (செப்.15) மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
கோப்புப் படம்
பகிர்:


சென்னை: விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் வெள்ளிக்கிழமை (செப்.15) மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை நாள்களை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரங்களில் நெரிசலைக் குறைக்க மெட்ரோ சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று வெள்ளிக்கிழமை (செப்.15) மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, மெட்ரோ ரயில் பயணிகள் நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →