தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாலாலயம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உபகோயில்களான இடும்பன் கோயிலுக்குக் குடமுழுக்கு விழா பாலாலயம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உபகோயில்களான இடும்பன் கோயிலுக்குக் குடமுழுக்கு விழா பாலாலயம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் பெருந்திட்ட வளாகப்பணிகள் மற்றும் குடமுழுக்கு விழா திருப்பணிகளும் ஒருங்கிணைந்து நடைபெறுகிறது.

ஸ்ரீ இடும்பன் சுவாமி பாலாலயம்

திருக்கோயில் உபகோயில்களுக்கு வியாழக்கிழமை (செப். 21) காலை பாலாலயம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமாகி தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

திருக்கோயில் இராஜகோபுரம் வாசல் அருகேயுள்ள யானைகள் இருப்பிடத்தில் வைத்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று, மரத்திலான ஸ்ரீ சுந்தர விநாயகர், ஸ்ரீ வீரகாளியம்மன், ஸ்ரீ இடும்பன் சுவாமி மற்றும் ஸ்ரீ சங்கிலி பூதத்தார் சிற்பங்களுக்கு ஆவாஹனம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, அதே இடத்தில் வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், துணை ஆணையர் வெங்கடேசன், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் பிரவீன், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், வேதமூர்த்தி, பேஷ்கார் ரமேஷ், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராம்தாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT