கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அக்.1ல் சிறப்பு மருத்துவ முகாம்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

டெங்குவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி, 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.  பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்த செல்கிறோம். இந்தப் பணி இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது எனத் தெரிவித்தார். 

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின்  உடல் உறுப்பானது தானம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கானது நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT