கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (மாலை 6.30 வரை) திருவள்ளூர், சேலம், ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பத்தூர், கோவை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய  லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT