தமிழ்நாடு

எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

DIN

மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், நாட்டின் ‘பசுமைப் புரட்சி’யின் முக்கிய சிற்பியுமான பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக, வியாழக்கிழமை காலை (செப்டம்பர் 28) 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

அவரது மறைவுக்கு பிரதமர், முதல்வர், கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதனின் அறக்கட்டளையில் அவரது உடல், இன்று(செப். 29, வெள்ளிக்கிழமை) காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது மகள் சௌமியா சுவாமிநாதனிடம் பேசியதுடன் ஆறுதலும் தெரிவித்தார். 

நாளை(செப். 30, சனிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரமெல் அழகா?... கஜோல்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!

மெல்போர்னில்.. அதிதி ராவ்!

‘பாஜக கைகளில் இருக்கும் பொம்மை’: தேர்தல் ஆணையம் மீது மஹுவா மொய்த்ரா எம்.பி. சாடல்!

கடலும் கன்னியும்... இவானா!

SCROLL FOR NEXT