கோப்புப் படம். 
தமிழ்நாடு

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும்: விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவு!

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி அவரது திருவுருவச் சிலைக்குகு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

DIN

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி அவரது திருவுருவச் சிலைக்குகு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகா் விஜய் தனது ரசிகா் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என பெயா் மாற்றம் செய்து 234 சட்டபேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை அண்மையில் நியமித்தார். கடந்த 2021-22 இல் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினா் கணிசமான வெற்றியை பதிவு செய்தனா். ஒரு சில இடங்களில் அதிமுக, நாம் தமிழா் போன்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடம் பிடித்த நிகழ்வுகளும் அரங்கேறின.

இதன் தொடா்ச்சியாக, கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழகம் முழுவதும் உள்ள சட்டபேரவை தொகுதிகளில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 1600-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியருக்கு நடிகா் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

மேலும் விஜய் மக்கள் இயக்கம் பெயரில் நடிகர் விஜய் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குகு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நம் தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்கள் கௌரவப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Skin care-க்கு இந்த 3 மட்டுமே போதும்! செய்யக்கூடாதவை என்னென்ன?

அழகும் ஐஸ்வர்யமும்... ஆஷிகா!

கரூர் பலி: எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான் - அண்ணாமலை

கரூர் பலி: ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை - அண்ணாமலை

லடாக்கின் குரலை ஒடுக்க இளைஞர்களைக் கொன்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது! -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT