முகப்பு
தமிழ்நாடு

உ.பி. துணை முதல்வருடன் ஜெயிலர் படம் பார்த்த ரஜினி

உ.பி. துணை முதல்வர் கேசவ பிரசாத் உள்ளிட்டோருடன் அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தார்.  

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

உ.பி. துணை முதல்வர் கேசவ பிரசாத் உள்ளிட்டோருடன் அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தார். 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இதில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இத்திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜெயிலர் படம் வெளியான முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உ.பி. துணை முதல்வர் கேசவ பிரசாத் உள்ளிட்டோருடன் அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தை இன்று கண்டு மகிழ்ந்தார்.  அப்போது ரஜினியின் மனைவி லதாவும் உடன் இருந்தார். முன்னதாக உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலையும் நடிகர் ரஜினி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →