முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்திய பிறகு அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று ஓபிஎஸ் மரியாதை செலுத்தவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.