முகப்பு
தமிழ்நாடு

ஆக.6 முதல் சிறப்பு மலை ரயில் இயக்கம்

சிறப்பு மலை ரயில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

சிறப்பு மலை ரயில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

உதகை - மேட்டுபாளையம் இடையே ஆக.6 முதல் ஆக.27 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படவுள்ளது.

சனிக்கிழமை காலை 11.25க்கு உதகையில் இருந்து புறப்பட்டு மாலை 4.20க்கு மேட்டுபாளையம் சென்றடையும். மேட்டுபாளையத்தில் இருந்து காலை 9.10க்கு புறப்படும் மலை ரயில் பிற்பகல் 2.25க்கு உதகை வருகிறது.

உலக புகழ்பெற்ற உதகை மலை ரயில் தினந்தோறும்  மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு உதகை சென்றடையும்.

உதகை கோடை சீசனை யொட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக   தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →