தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

DIN

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டு ரூ.1,930க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இதன்படி, நிகழாண்டு ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு உருளையின் விலை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டு, இன்று முதல் ரூ.1,930க்கு விற்பனையாகிறது.

அதேசமயம் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி, ஒரு உருளை ரூ.818.50க்கு விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT