உ. நீலன் 
தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் நிர்வாகி உ. நீலன் காலமானார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் நிர்வாகி உ. நீலன் (88) காலமானார்.

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் நீலன் கல்விக் குழும நிறுவனர் உ. நீலன் (88) வயது மூப்பின் காரணமாக திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் சென்னையில் காலமானார்.

விடுதலை பத்திரிக்கையின் முன்னாள் துணை ஆசிரியர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணைத் தலைவர், பெரியாரின் தொண்டர், நூலாசிரியர் என பன்முகத்தன்மை வாய்ந்தவராக திகழ்ந்தவர்.

சென்னை சைதாப்பேட்டை விநாயகம்பேட்டை தெருவிலுள்ள (ராஜ்தியேட்டர் அருகில்) அன்னாரது இல்லத்தில் 2.04.2024 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி வரையிலும், மாலை 4.30 மணிக்கு மேல் இரவு 10 மணிவரை கூடுவாஞ்சேரி நீலன் பள்ளி வளாகத்திலும் இறுதி மரியாதை செலுத்த திருவுடல் வைக்கப்படும்.

3.04.2024 புதன்கிழமை காலை 6 மணி முதல் அன்னாரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீலன் பள்ளி வளாகத்தில் திருவுடல் வைக்கப்படும்.

இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும்.

இறந்த உ.நீலனுக்கு வசந்தா என்ற மனைவியும், நீடாமங்கலம் நீலன் பள்ளி தாளாளர் நீலன், அசோகன் உள்ளிட்ட நான்கு மகன்கள், பேரன்கள்,பெயர்த்திகள் உள்ளனர்.

தொடர்புக்கு: 919840910851,9842480418

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘எஸ்ஐஆர் பணி: நவ. 25 வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்’

உழவர் நல சேவை மையங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்: டிசம்பரில் தொடக்கம்

தென்காசி ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

கோவில்பட்டியில் தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் தா்னா

SCROLL FOR NEXT