தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுடன் பேசிய சாகு, "தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 39 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
புதிய தொழில்நுட்பத்தில் உள்ள மார்க் 3 வாக்குப்பதிவு இயந்திரம் மக்கள்வைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதுவரை 13 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.