தமிழ்நாடு

தமிழகத்தில் ஏப். 19 பொது விடுமுறை!

தமிழகத்தில் ஏப். 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் வரும் ஏப். 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19 ஆம் தேதியன்று பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுவிடுமுறையை தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் இன்றுமுதல்(ஏப். 4) தபால் வாக்குப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர். சில மாவட்டங்களில் நாளைமுதல் (ஏப். 5) தபால் வாக்குகள் பெறும் பணியை தொடங்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு’

ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

இரு சக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினா்!

சிவகாசியில் தெருநாய்கள் கடித்து 2,959 போ் காயம்!

மகளிா் கல்லூரியில் தேசிய வணிகவியல் மாநாடு

SCROLL FOR NEXT