முகப்பு
தமிழ்நாடு

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது? - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:24 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் விக்கிரவாண்டியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது? என பேசினார்.

அப்போது,

- பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால், நாடெங்கும் மதவெறி ஊட்டப்பட்டு, எங்குப் பார்த்தாலும் மதக்கலவரம் என்ற நிலைமை உருவாகும்.

- மக்களைப் பிளவுப்படுத்தி வேற்றுமைகளும் - அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்க அரசியல்சட்டத்தை மாற்றுவார்கள்.

- படிப்பதால்தான் இவர்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள் என்று கல்வியை நம்மிடம் இருந்து பறிப்பார்கள்.

- மக்களைச் சிந்திக்க விடாமல் தடுக்க வரலாற்றை, பொய்களால் மாற்றி எழுதுவார்கள்.

- மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து – மாநிலங்களை நகராட்சிகள் போன்று நடத்துவார்கள்.

- மாநிலங்களில் இருக்கும் மக்கள், சிறிய பிரச்னைக்குக்கூட மத்திய அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை உருவாகிவிடும்.

- மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, ஆளுநர்கள் மூலமாக செயல்படவிடாமல் தடுத்து, போட்டி அரசாங்கம் நடத்துவார்கள்.

- தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி, முடக்கப்படும்.

- பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும். அந்த நிலையை இப்போதே முயன்று தடுத்திடல் வேண்டும்.

- சொந்தங்களாக வாழும் இஸ்லாமிய – கிறிஸ்துவர்களை, இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றி, அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள்.

- ஒரே நாடு – ஒரே கலாசாரம் – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே தேர்தல் – ஒரே ரேஷன் கார்டு – ஒரே உணவு – ஒரே அரசு – ஒரே கட்சி – ஒரே தலைவர் என்று ஒரே ஒரே - என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்!

- பாஜகவின் திட்டங்கள் மிக மிக மோசமானது!

பாஜக ஆட்சி மத்தியில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய ஒவ்வொருவரும் குறிப்பாகப் பெண்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டிய தருணமிது.

இந்த விடுதலைப் போரில் இந்திய மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிரிகளை அடையாளம் காண்பது மட்டுமல்ல – துரோகிகளையும் சேர்த்தே அடையாளம் காண வேண்டும்! எதிரிகளையும் - துரோகிகளையும் விரட்டியடிக்க வேண்டும்!

பாஜகவுக்கு சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் தக்க பாடம் புகட்ட வேண்டும்!

இதைத் தவறவிட்டால், மாநிலங்களின் ஆட்சி என்பதே இல்லாமல் போய்விடும். விழிப்புடன் இருப்போம். இந்தியா கூட்டணி ஆட்சியை அமைப்போம்.

தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக – அதற்குத் துணைபோகும் பாமக - தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அதிமுக – ஆகிய கட்சிகளை ஒருசேர வீழ்த்துங்கள்!

நாடும் நாமே நாற்பதும் நாமே என்ற நிலையை உருவாக்குவோம்.

முழு கட்டுரையைப் படிக்க →