கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் ஏப். 9-ல் பிரதமரின் வாகனப் பேரணி!

சென்னையில் ஏப். 9 ஆம் தேதி பிரதமரின் வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.

DIN

பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஏப். 9, 10 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்காக பிரசாரம் செய்ய பிரதமர் மோடி சென்னை வருகை தரவுள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 9-ஆம் தேதி மாலை 4 மணியளவில் மகாராஷ்டிரத்தின் கோண்டியாவில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்படும் பிரதமர், மாலை 4.10 மணிக்கு சென்னைக்கு வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக ஆளுநா் மாளிகை அமைந்துள்ள கிண்டி வரை மக்களைச் சந்தித்தவாறு பிரதமர் செல்வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபடவுள்ளார்.

பாண்டி பஜார் சாலையில் செய்யப்ட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT