குஷ்பு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மாட்டேன்: குஷ்பு

பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

DIN

மருத்துவர்கள் அறிவுறுத்தலால் தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ள முடியாது என்று நடிகை குஷ்பு ஜேபி நட்டாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"சில நேரங்களில், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் என்னால் பிரசாரத்தில் ஈடுபட முடியாது.

பிரதமர் நரேந்திர மோடி கொள்கையை பின்பற்றி செயல்பட்டு வரும் நான், கனத்த இதயத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள முதுகு தண்டு பிரச்னை காரணமாக, நேரடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாது. சமூக வலைதளங்களில் தொடர்து பிரசாரம் செய்வேன்."

பாஜக தேசியத் தலைவர் நட்டாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் நடிகை குஷ்பு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT