அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் 9-ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகை சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழக திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் நபர்களுக்கும் அதில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர், விசாரணைக்கு ஆஜராக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அழைப்பாணை அனுப்பிய நிலையில், தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமீர் நேரில் ஆஜரானார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுகவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடக்கும் இடங்களில் தூப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமீர் இயக்கி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.