தமிழ்நாடு

'ரோடு ஷோ' நடத்தினால் ஓட்டு கிடைக்குமா? இபிஎஸ்

திமுக என்பது கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பனி, குடும்ப அரசியல் நடத்துகிறது.

DIN

வாகனப் பேரணி நடத்தினால் ஓட்டு கிடைக்குமா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொள்ளாச்சியில் வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், ஆணைமலை - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த பாடுபட்டது அதிமுக.

பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப்பார்க்கிறார் ஒருவர். விமானத்தில் ஏறும்போது பேட்டி, இறங்கும்போது பேட்டி என அண்ணாமலை பெயரைக் குறிப்பிடாமல் பேசினார்.

மேலும், தொண்டர்களைக் கொண்ட ஒரே கட்சி அதிமுக. இங்கு உழைப்பவர்கள் எல்லோருக்கும் பதவி உண்டு. அதிமுக கிளைச்செயலாளராக இருந்து பொதுச்செயலாளராக நான் மாறியுள்ளேன்

தேர்தல் பிரசாரங்களில் மு.க. ஸ்டாலின் என்னை விமர்சித்து பேசுகிறார். திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்கத் தயங்குகிறார். கண்ணுக்குத் தெரியாத காற்றில்கூட ஊழல் செய்தது திமுக.

திமுக என்பது கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பனி, குடும்ப அரசியல் நடத்துகிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது.

அமைச்சர் உதயநிதி தன்னுடைய பிரசாரத்தில் ஒற்றை செங்கலைக் காட்டி எந்த பயனும் இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்தியில் சென்று பேசாமல் ஒற்றை செங்கலைக் காட்டுகிறார்.

திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கை மு.க. ஸ்டாலின் இழந்துவிட்டார்.

தேங்காய் நார் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை அதிமுக வெற்றி பெற்றால் நிறைவேற்றும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT