தமிழ்நாடு

ரமலான் பண்டிகை: நெல்லையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

DIN

திருநெல்வேலி: ரமலான் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் இஸ்லாமியா்கள் ஒருவரையொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை தமிழகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்தார். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகள் நடத்தி ரமலான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் , இஸ்லாமிய பிரசார பேரவையின் சார்பில் ரமலான் சிறப்புத் தொழுகை மேலப்பாளையம் பஜார் திடலில் நடைபெற்றது. தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது உசேன் பெருநாள் உரையாற்றினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன், பொருளாளர் மைதீன்பாதுஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். தொழுகைக்கு முன்பாக 500-க்கும் மேற்பட்ட ஏழை}எளியவர்களுக்கு பித்ரா அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள்

மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மு.அப்துல் வஹாப் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எஸ்டிபிஐ கட்சி சர்பில் மேலப்பாளையம் விரிவாக்க பகுதியான கரீம்நகரில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கே.எஸ்.சாகுல் ஹமீது பெருநாள் குத்பா உரையாற்றினார்.

பாளையங்கோட்டையில் உள்ள சிந்தா மதார்ஷா தைக்கா ஜும்ஆ பள்ளிவாசல் சார்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஷேக் சிந்தா மதார்ஷா தர்ஹா ஈத்கா திடலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோல தாழையூத்து, பர்கிட்மாநகரம், சங்கர்நகர், பேட்டை, பழையபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ரமலான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. தொழுகை முடிந்ததும் இஸ்லாமியா்கள் ஒருவரையொருவா் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ நகரில் பண்பாட்டு பயிற்சி வகுப்பு

நெல்லை மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்: 2 மாணவா்கள் இடைநீக்கம்

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்

‘மகளிா் விடுதிகள் உரிமத்துக்கு மே 31வரை விண்ணப்பிக்கலாம்’

நெல்லையில் கம்பராமாயண சொற்பொழிவு

SCROLL FOR NEXT