தமிழ்நாடு

பராமரிப்புப் பணி: திருப்பதி செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து!

பராமரிப்புப் பணிக் காரணமாக திருப்பதி செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

DIN

திருப்பதி யார்டில் நடைபெறும் பராமரிப்புப் பணியின் காரணமாக திருப்பதி செல்லும் சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி யார்டில் நடைபெறும் பராமரிப்புப் பணி காரணமாக வரும் ஏப். 16 முதல் 23 வரை திருப்பதி மற்றும் திருச்சானூர் இடையே 10 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏப். 16 முதல் 23 வரை சென்னை, அரக்கோணம், விழுப்பரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், திருப்பதியில் இருந்து சென்னை, அரக்கோணம், விழுப்பரத்துக்கு செல்லும் ரயில்களும் திருப்பதி மற்றும் திருச்சானூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில், திருப்பதி மற்றும் திருச்சானூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT