தமிழ்நாடு

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! -முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

DIN

தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து செட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு காரில் சிங்காநல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, தனது காரை சாலையோரம் நிறுத்தச் சொன்ன ராகுல், அங்கிருந்த ஒரு இனிப்பு கடைக்கு சென்று ஒரு கிலோ மைசூர்பாகு, ஒரு கிலோ ஜிலேபி வாங்கினார்.

யாருக்காக இனிப்பு வாங்குகிறீகள் சார்? என்று கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்க, அப்போது இனிப்பு வகைகளுக்கான கட்டணம் முழுவதையும் தானே கொடுத்த ராகுல், சற்றும் யோசிக்காமல் “என் சகோதரர் ஸ்டாலினுக்கு தான்” என்று பதிலளிக்கிறார்.

பின்னர்,கைகுலுக்கி வரவேற்ற கடையின் உரிமையாளர், அந்த கடையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் குழுவாக ராகுல்காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்ட ராகுல், இனிப்பு கடையில் வாங்கிய இனிப்பு வகைகளை பேப்பர் கேரி பேக்கில் போட்டு யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக தானே வைத்துக்கொண்டதால் உடன் வந்தவர்கள் யாருக்கு இந்த இனிப்பு வகைகள் என அவரிடம் கேட்க முடியாமல் ஆச்சரியத்துடன் தவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்பு கடையில் ஒன்றில் இனிப்பு வாங்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராகுல்காந்தியும் இந்த விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

”அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! எனது சகோதரர் ராகுல் காந்தியின் நெகிழ்ச்சியான செயலால் மனம் நெகிழ்ந்து போயுள்ளேன்.

ஜூம் 4-ஆம் தேதி ராகுல் காந்திக்கு இந்தியா ‘இனிப்பான வெற்றியை’ நிச்சயமாக உரித்தாக்கும்!” எனப் பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT