தமிழ்நாடு

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

Vanisri

சென்னை, கொளத்தூர், ஐ.சி.எப். பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் ஆகியோருக்கு வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்து சென்ற இடங்களில் எல்லாம் மகளிர் பெருமளவில் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஸ்டாலின், அங்குள்ள விளையாட்டுத் திடலுக்குச் சென்று அங்கு பயிற்சி செய்துகொண்டிருந்த கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள் கூறி அவர்களுக்கு மேலும் வசதிகள் ஏதும் தேவைப்படுகிறதா என்று அக்கறையுடன் கேட்டார்.

அங்கிருந்த கால்பந்து வீரர்களுடன் ஸ்டாலின் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். கொளத்தூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று திமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.

முதல்வரின் வருகைக்காக அந்தப் பகுதி மக்கள், வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, ஆர்வத்தோடு திரண்டு நின்று இசை வாத்தியங்களோடு வரவேற்றனர். அந்தப் பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT