தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக தருமபுரியில் 44.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மிகக் குறைந்த அளவாக மத்திய சென்னையில் 32.31 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
நாகை தொகுதியில் 42.05 சதவீதமும், தூத்துக்குடியில் 39.11 சதவீதமும், திருச்சியில் 38.14 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 35.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 950 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.