முகப்பு
தமிழ்நாடு

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

Updated On : 19 ஏப்ரல், 2024 at 9:17 PM
பகிர்:

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து மென்பொறியாளர் சிவகுமார் தஞ்சாவூர் வந்துள்ளார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருவிடைமருதூர் பேரவைத் தொகுதி பந்தநல்லூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வரும் இவர் அமெரிக்க குடியுரிமையை பெறாமல் தற்போது வரை இந்திய குடியுரிமையுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இவர் ஒவ்வொரு தேர்தலிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிலிருந்து தமிழகம் வந்து தனது வாக்கை பதிவு செய்து வருகிறார்.

Advertisement

அமெரிக்காவில் வசித்தாலும் இந்திய குடியுரிமையை நான் விட்டுக் கொடுக்கவில்லை. இது என்னுடைய உரிமை அதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்தியா வந்து என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து வாக்களித்து வருவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.