முகப்பு
தமிழ்நாடு

மே 1 முதல் சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் இயக்கம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 5:28 PM
பகிர்:

ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோடுக்கு மே 1 முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து மே 1 முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08311) மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

Advertisement

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 08312) மே 3 முதல் ஜூன் 28 வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.45 மணிக்கு பறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூா் சென்றடையும்.

இந்த ரயில் ஈரோட்டிலிருந்து சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, பீமவரம் டவுன், விசாகப்பட்டினம், பாா்வதிபுரம் வழியாக சம்பல்பூா் சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments