தமிழ்நாடு

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்!

DIN

குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்!

தேர்வாணையத்தின் திருத்தியமைக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை இன்று (ஏப். 24) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Annual Planner_2024_Revised.pdf
Preview

துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ஆம் தேதியும், 2,030 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவும் நிறைவடைந்துவிட்டது.

இந்த நிலையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மார்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 27-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரப் பிரதேசம்: மக்களை அச்சுறுத்திய ஓநாயை சுட்டுக்கொன்ற வனத்துறை

சபரிமலையில் 25 லட்சம் பேர் சுவாமி தரிசனம்! மாற்றி யோசித்த பக்தர்கள்! ஆனால்

ஜோர்டான் புறப்பட்டார் மோடி!

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

SCROLL FOR NEXT