தமிழ்நாடு

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

Sasikumar

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மூட்டை தூக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கமலக்கண்ணன்.

தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத நிலையில் தனது சொந்த வேலைகளை கவனித்து வருகிறார்.

இதில் விவசாய வேலைகளில் மிகுந்த ஈடுபாடுகளை கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது நிலத்தில் பயிரிட்ட பொருட்களை டிராக்டர் மூலம் தனது வீட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது டிராக்டரிலிருந்து மூட்டைகளை அவரே தலையில் சுமந்து இறக்கி வைத்தார்.

இதனை பார்த்த அவரது ஆதரவாளர் ஒருவர் தங்களுக்கு நாங்கள் வாக்களித்தோம். ஆனால் நீங்கள் இதுபோன்ற வேலைகளை செய்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், இந்த வேலைகள் செய்தால்தான் சாப்பாட்டிற்கு அரிசி கிடைக்கும் என தெரிவித்தார்.

இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேங்காய் மதிப்பு கூட்டுதல், பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

ஓடிடியில் இட்லி கடை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

முதல் டி20: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு! அணி விவரம்...

SCROLL FOR NEXT