தமிழ்நாடு

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்த நிலையில். வெய்யில் போதும் போதும் என்றளவுக்கு மக்களை திணறடிக்க வைத்தது.

வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸும், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும்காரைக்கால் பகுதிகளில் 35 - 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வெளியில் செல்லும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குடை மற்றும் தண்ணீர் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூம்புகாா் சாயாவனம் கோயில் கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு; 10 போ் காயம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை!

புதை மின்வடங்கள் சேதம்: சாலை தோண்டும் பணிகளை மின்வாரியம் மேற்கொள்ளத் திட்டம்!

தில்லி மாநில பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்!

SCROLL FOR NEXT