தமிழ்நாடு

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து இன்று (ஏப். 30) விபத்துக்குள்ளானது.

DIN

ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து இன்று (ஏப். 30) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தரப்பில் முதல்கட்ட தகவலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறையையொட்டி அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில் ஏற்காட்டிலிருந்து சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது.

அப்போது ஏற்காடு மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் நிலைதடுமாறி பேருந்து கவிழ்ந்துள்ளது. இதில், உருண்டுவந்த பேருந்து 12வது கொண்டை ஊசி வளைவில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சிறுவன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அவ்வழியாக வரும் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT