முகப்பு
தமிழ்நாடு

புறநகர் ரயில்கள் ரத்து- பயணிகள் கடும் அவதி

பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2024, 11:53 am IST
புறநகர் ரயில் (கோப்புப்படம்)
பகிர்:

பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரும் பயணிகள் பேருந்து மூலம் மட்டும் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஜூலை 23-ஆம் தேதி முதல் புறநகா் மற்றும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, கடந்த சனிக்கிழமையிலிருந்து ஆக.14-ஆம் தேதி வரை முக்கிய நேரங்களில் கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.