கிருஷ்ணா சிவுகுலா 
தமிழ்நாடு

சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.228 கோடி நன்கொடை கொடுத்த முன்னாள் மாணவர்!

சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.228 கோடி நன்கொடை முன்னாள் மாணவர் ஒருவர் கொடுத்துள்ளார்.

DIN

சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.228 கோடி நன்கொடையாக முன்னாள் மாணவர் ஒருவர் கொடுத்துள்ளார்.

சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரும், முனைவருமான கிருஷ்ணா சிவுகுலா 1970 பேட்சில் சென்னை ஐஐடியில் படித்தார்.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடியில் இந்தியா மட்டுமன்றி உலக அளவில் சிறப்பு பெற்றது. இங்கு படித்தவர்கள் இன்று உலகம் முழுவதும் பல முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இந்த நிலையில் சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் சுமார் ரூ.228 கோடி நன்கொடை வழங்க முன்வந்துள்ளார். இது இந்திய அளவில் கல்வி நிறுவனத்திற்கு அதிக அளவில் வழங்கப்பட்ட நன்கொடையாகும்.

1970 ஆம் ஆண்டு ஏரோனாடிக்ஸ் பாடப்பிரிவில் எம்.டெக் படித்த கிருஷ்ணா சிவுகுலா, ஆண்டுக்கு சுமார் ரூ. 1000 கோடி வருவாய் ஈட்டக்கூடிய 2 தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார்.

இந்த நன்கொடையின் மூலம் கல்வி நிறுவனத்தை மேம்படுத்தசென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT