கனமழை 
தமிழ்நாடு

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..

Parvathi

நீலகிரி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், ஆகஸ்ட் 6 (இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மி வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், திருவாரூர், நாளை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7(நாளை) திருவாரூர், நாகை, மயிலை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூரின் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

இன்று மன்னார் வளைகுடா தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

சும்மா இரு மனமே... நந்திதா ஸ்வேதா!

நீலகிரி, கோவைக்கு நாளை(ஆக. 5) ரெட் அலர்ட்!

சப்தமின்றி தனிமையில்... கர்விதா சத்வானி

SCROLL FOR NEXT