முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை தொடா் சரிவு: பவுன் ரூ.50,640-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2-ஆவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்பனையானது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 9:05 PM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2-ஆவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்பனையானது.

மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.51,200-க்கு விற்பனையானது.

2 -ஆவது நாளாக புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,330-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை கடந்த 2 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,120 குறைந்து மீண்டும் ரூ.51,000-க்கு கீழ் சென்றுள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.87-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.87,000-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →