சின்னத்திரை நடிகை தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை 
தமிழ்நாடு

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை

DIN

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சித்ரா மரணத்துக்கு ஹேம்நாத்தான் காரணம் என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்கள் காட்டப்படவில்லை என்பதை காரணம் காட்டி, அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களின் அளவற்ற அன்பைப் பெற்றிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே இருந்தார்.

இந்த நிலையில், சித்ரா மரண வழக்கில், ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீஸாா், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சித்ராவும் நானும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். எனக்கும் சித்ராவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவரது தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்து, சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. கைது செய்யப்பட்டு 60 நாள்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கை 6 மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் 56 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டன. காவல் துறை தரப்பில் சித்ராவின் கணவர் தற்கொலைக்கு தூண்டியதாக 498ஏ மற்றும் 306 ஐபிசி பிரிவுகளின்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட வழக்கு விசாரணை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், காவல் துறை தரப்பில் போதிய ஆதாரங்கள் மூலம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, நீதிபதி ரேவதி இந்த வழக்கில் இருந்து ஹேம்நாத்தை விடுவித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT