கோப்புப் படம்  
தமிழ்நாடு

அகமதாபாத்-திருச்சி வாராந்திர ரயில்: டிசம்பா் வரை நீட்டிப்பு

அகமதாபாத்தில் இருந்து திருச்சி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Din

அகமதாபாத்தில் இருந்து திருச்சி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்தி:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை தோறும், மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 09419) இயக்கப்படுகிறது.

இந்த ரயில் ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா் வழியாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ரயில் சேவை தொடா்ந்து டிச.29-ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு அருகே ஆம்னி வேன் மோதி கூலி தொழிலாளி பலி

முதல்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ்..! பூஜை புகைப்படங்கள்!

தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்: காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

2 நாள்களில் ரூ.10 உயர்ந்த வெள்ளி! தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

SCROLL FOR NEXT